kavithai

" விட்டில்களின் ஒளியோடு...
" விளையாடும் உனது விழிகள் !
" உனது பிஞ்சு விரல்கள் தனைத் ...
" தொட்டுப் பார்க்கத் துடிக்கும் ...
" மழலைகளைப் போன்ற மலர்கள்!
" இவளது இதழ்கள் சிவப்பா ?
" கீழைச் செவ்வானம் சிவப்பா ?
" என பட்டிமன்றம் நடத்தும்..
" பட்சிகள் கூட்டம்!
" அடி குங்குமப் பூ மேனியழகியே....
" உனது கார்குழல் தீண்டும் ....
" தென்றலாக நான் வரவா?
" இதுபோல் அர்த்தம் புரியா கவிதைகள்
" ஆயிரமாயிரம் கூறி...
" உன் காலடியில் காத்திருக்கும் ..
" ஒரு காளையர் கூட்டம்,,
" அதில் நானும் கூட !!
" இதேதான்.... இப்படித்தான்...
" ஏழெட்டு நாளா...
" நான் ஆளே சரியில்லைங்க...
" எனது புலம்பல்கள் கேட்டு..
" பூகம்பமே வெடிக்கும் போல!
" இது தான் காதல் மயக்கமா?

எழுதியவர் : svk venkat (10-Apr-14, 7:02 pm)
சேர்த்தது : svkvenkat
பார்வை : 69

மேலே