கல்லறை தோட்டம்

கல்லறை
தோட்டத்தின் கதவுகள்
என்றுமே
வரவேற்கிறது உயிர்
அற்ற மனிதர்களை..................!

உறக்கத்தை
நிரந்தராம உறங்கவைத்து
சப்தமில்லாமல்
தாலாட்டுப் பாடிடும்
சிறு தூக்கமும்
பலமணி
நேரம் நீடித்திடும்..................!

எங்கு சென்றாலும்
இங்கே ஒருநாள்
வந்துதானே ஆகவேண்டும்..........!

இடையில்
உலகத்தில் வேடிக்கை
காட்டுகிறான்
நீண்ட நாள்
வாழ்வதற்கு
முயற்சியும் செய்கிறான் ............!

அவசரமாய்
கடந்து செல்வோருக்கு
ஆழ்நிலை
தூக்கம் இங்கேதானே ..........!

இங்கே
அரசாட்சிக்கும் இடமில்லை
அரசியலுக்கு
இடமில்லை...........!

எல்லோரும்
ஒருவராக இணைந்தபிறகு
சடலமெனும்
பெயர் மட்டுமே
மிஞ்சுகிறது..........!

சாதிகளும்
மதங்களும் சடங்குகளும்
சம்பிரதாயங்களும்
இங்கே
நிரந்தரமாகப்
புதைக்கப்படுகிறது.........!

எழுதியவர் : லெத்தீப் (10-Apr-14, 8:42 pm)
Tanglish : kallarai thottam
பார்வை : 242

மேலே