என்றுமே இனியவை
வெற்றிடத்தை
நான் பார்க்கிறேன்
வேற்றுமைகள் இல்லா
உள்ளத்துடன்
சிறுவதில்
குழந்தையாக...........!
இரவு பகலும்
எப்படி செல்கிறது எனக்கு
ஒன்றும் தெரிந்ததில்லை
எனது கவனம்
விளையாட்டில்..................!
பசித்தால்
வீடு வருவேன் என்
அன்னை
வீட்டு வாசலில்
என்றும் காத்திருப்பாள்
எனக்காக..................!
உழைப்பது
எப்படி என எனக்கு
தெரியாது - எனது
வருமானம்
என் தந்தை
சட்டை பை...............!
காசுகொடுத்தால்
கடலைமிட்டாய் என் வீட்டு
அருகாமையில்
பெட்டி கடை..............!
விளையாடுவேன்
விரைந்து ஓடுவேன் - என்
அருகில் என்றும்
எனது நண்பர்கள்.............!
எத்தனை முறை
சாப்பிட்டாலும் தேகிட்டாத
புளி மாங்கா
அடுத்த வீட்டு
தோட்டத்தில்..............!
டெண்டு
கொட்டாய் சினிமா
டிக்கெட்
எடுக்காமல் கீத்துவழியே
சென்று
திருட்டுப்படம்
பார்த்த நாட்கள்............!
எனது நினைவில்
என்றும் நீங்க நினைவுகளாக
குடிகொண்டுவிட்டது.............!
நான்
தற்போது அலுவலகத்தில்
பணிபுரிகிறேன்.............. !