உனது அருகிலே என்றும்
நேசத்தை தருகின்ற
மனதை அன்போடு அரவணை
என்றுமே உன்
அருகில் தோழர்கள்
====================
அமைதியாக
வாழ்ந்திட
கோபத்தை துறந்திடு
என்றுமே உன்
அருகில் உலகங்கள்
====================
தனிமையோடு
உறவு கொண்டிடு
உள்ளத்தில் அமைதி
நிலவிடும்
என்றுமே உன்
அருகில் தைரியம்
===================
பாவத்தை கண்டு
ஒதிங்கிடு - மனதில் தெளிவு
பிறந்திடும் - என்றுமே உன்
அருகில் உண்மை
===================
பயத்தை கண்டு
நகைத்திடு - உள்ளத்தில் உறுதி
வளர்ந்திடும் - என்றுமே
உன் அருகில் உறுதி
===================
சோதனையை
கொஞ்சம் அழைத்திடு
வாழ்வில் படிப்பினை தரும்
வெற்றிக்கு
அதுவே முதல் படி
===================
தோல்வியை
என்றும் நெருங்கிடு
உனது தவறை காட்டிடும்
நிஜமான
மாயக்கண்ணாடி
===================