சொல்வதெல்லாம் உண்மை
வாங்க பேசலாம் வாங்க-இங்கு
சொல்வதெல்லாம் உண்மை
வீட்டுக்குள்ள பிரச்சனையா
பேசித் தீர்க்க
பெரியவங்க இல்லையா
பஞ்சாயத்தில்
நம்பிக்கை இல்லையா
பக்குவமா உங்கள் பிரச்சனை
பலர் பார்க்கஊருக்குத் தெரிய
ஊதிப் பெரிதாக்கி உத்தமமாய்
தீர்த்து வைப்போம்!
கணவன் துணி தோய்க்கவில்லையா
காய்கறி வாங்கவில்லையா
கவுன்சிலிங் போகவேண்டாம்.
கண்கலங்கும் சம்பவங்கள்
எல்லாம் கதையல்ல நிஜம்தான்.
கொட்டித்தீருங்கள்!
காமரா முன் கூச்சம் எதற்கு
கூசாமல் கூறுங்கள்.
மேட்டுக்குடிப் பெண்கள் -நாம்
உங்கள் ஓட்டைக் குடிசைக்குள்
நடப்பவற்றை உலகறிய ஒப்புவிப்போம்