குழந்தைகளே

சின்னஞ்சிறு குழந்தைகளே
சிங்கார மொட்டின் மலர் இனமே
நெஞ்சில் நிறைந்த முழுநிலவாய்
கவலை தீர்த்த மருந்தமுதே!

=== === === === === === ===
உண்மையை என்றும் எண்ணிடுவீர்
நற்குணம் மறவா வளர்ந்திடுவீர்
தீயவை அறவே கலைந்திடுவீர்
பெரியோர் பாதையில் சென்றுடுவீர்!

=== === === === === === ===
உலகை என்றும் நேசித்தே
உயிராய் கல்வியை வளர்த்திடுவீர்
பாசத்துடனே தமிழ் இனத்தை
பாங்காய் போற்றியே வாழ்ந்திடுவீர்!

=== === === === === === ===
எல்லா இனமும் சமமென்றே
மனதில் என்றுமே எண்ணிடுவீர்
அல்லா இயேசு ராமபிரான்
எல்லாம் நமக்கு ஒன்றேதான்!

=== === === === === === ===
வேற்றுமை இல்லை குழந்தைகளே
உலகை ஆழ பிறந்தீர்கள்
ஒற்றுமை தேசம் மலர்ந்திடவே
ஓர் மதம் என்றே உரைத்திடுவீர்!

=== === === === === === ===
சொல்லும் செயலும் ஒன்றானால்
சொர்க்கம் நம்மிடம் வந்தடையும்
மழையும் கூட பணியாகும்
கனவுகள் எல்லாம் நெனவாகும்!

=== === === === === === ===

எழுதியவர் : லெத்தீப் (10-Apr-14, 7:38 pm)
பார்வை : 67

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே