மலரும் மொட்டு......
என்னவென்று சொல்ல...
உன்னை பார்த்தவுடனேயே
பறிக்கத்தான் மனம் நினைக்கிறது...
ஏனோ...
இதயம் கணக்கிறதே...
பிஞ்சு இளங்குழந்தை கன்னத்தை
தடித்த முள்ளால் சீண்டுவது போல...
நெஞ்சு துடிக்கிறதே...
உன்னை தொட நினைக்கையில்..
உன்னை தொட்டு செல்லும்
தென்றலை கண்டும் அஞ்சுகிறேன்..
எங்கே...
அது உன் ஆயுளினை
அபகரித்துவிடுமோ என்று..
எத்தனை முறை பார்த்தேனும்
தாகம் குறையவில்லை எனக்கு...
ஆவல் மிகுகிறதே...
உன்னருகினில் இருந்திட...
உந்தன் வாசம்
எதற்குத்தான் ஒப்பாகும்..
நீயே சொல்லேன்..
என் மனதை
கொள்ளை கொண்டன
உன் தோற்றம்...
விட்டு பிரிய மனம் வரவில்லை...
தொட்டு பறிக்கவும் ஆசை இல்லை...
என்ன செய்வேன்..
உனை கண்டு ரசித்தே...
நொடியினை கரைத்திடுவேன்..
உன் வயதினை எப்படி அறிய..
என்று நீ பிறந்தாயடி என் கண்ணே..
உன் பிறப்பின் ரகசியத்தைக்கூறு...
முயற்சி செய்கிறேன்...
உன் அகவையை..
காணக்கிடைத்திடா உந்தன் முகம்..
என் கண்முன்னே எப்போதும் நிலைத்திடுமா..
நீ அரும்பும் வாசமும் நான் சுவாசித்திட முடியுமா?
சொல்லிடு என் மலரே...
நீ மலர்வது என்று?