வைக்கோல் என்ன விலை போகும்
வைக்கோல் என்ன விலை போகும் !
_____________________________________
சுமார் பத்து மாதங்களுக்கு முன்னால் என் நண்பன் அலைபேசியில் அழைத்தான் .விடயம் என்ன என்று கேட்டேன் .தொழில் செய்ய போகிறேன் என்றான்!,எனக்கு வியப்பாக இல்லை ஏனென்றால் அவன் எபோழுதும் அப்படித்தான் சொல்வான் செய்ய மாட்டான்.ஹோட்டல் ,ஐஸ்கிரீம் ,இந்த வரிசையில் அன்று புத்தக கடை ,என்ன செய்யலாம் எப்படி தொடங்குவது என்றான்.எங்கடா பிடிச்சா இந்த ஐடியா ! நேற்று பேப்பர் ல நாகர்கோயில் புத்தக கண்காட்சி விற்பனை அளவை பார்த்தேன் நல்ல காசு என்றான் .அடப்பாவி உனக்கு புத்தக கடை பத்தி எதுவுமே தெரியாதே ! (15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் யார் என்றே தெரியாது )
எதாவது பிரச்சனை என்றால் என்ன செய்வ ,பரவால புக் விக்கலனா பழைய விலைக்கு போட்ருலாம்,முதலிடு? 2 நண்பன் உதவி செய்றதா சொன்னான் ,ரிஸ்க் இல்லைடா,
ஓகே ,அடுத்து ஒரு கேள்வி கேட்டான்.பழைய புக் என்ன விலை போகும் .
வயல் அறுக்கும் பொழுது விளைந்ததா என்று பார்த்து அறுக்க வேண்டும் ,வைக்கோல் என்ன விலை போகும் என்று தெரிந்து கொண்டு அறுவடைக்கு போனால் எப்படி முதல் வந்து சேரும்?.............இன்னும் நண்பன் முயன்று பார்க்கிறான் தொழில் முனைய ?ஓலை கூட முடியவில்லை ?பார்க்கலாம்.