விதியின் விளையாட்டு19
மதனும் ரிஷானியும் பேசிக்கொண்டிருக்கும் சமயம் ரிஷானியைப்பார்த்து ம்....அப்புறம் சொல் என்று மதன் கேட்க பின்னிருந்து ஒரு குரல் நான் சொல்கிறேன் என்று...........
அதிர்ச்சியுடன் இருவரும் திரும்பி பார்க்க போலிஸ் அதிகாரி வினோத் மதன் பின்னால் நின்று கொண்டிருந்தார்.......!
சார் நீங்களா???என்றான்.சற்று அதிர்ச்சியுடன்!
ஆம்! நானேதான் என்றவர் ரிஷானியின் பக்கம் பார்வையை செலுத்தினார்.
சார் அது வந்து என்று இழுத்தான் மதன்,,,,,,,,
ம்........ம்.......இப்போது நன்றாக புரிகிறது நிஷாவின் காதலை நீ ஏன் மறுத்தாய் என்று புரிந்து கொண்டேன் என்று ரிஷானியை பார்த்து புன்னகைத்தார்.
நான் இங்கு வந்து எதற்கு என்று தெரியுமா? என்று கேட்டார்???
மதனும் ரிஷானியும் எதுவும் புரியாமல் ஒருவரையொருவர் விழிகளால் பார்த்து கேள்வி கேட்டு விட்டு அதிகாரி வினோத்தை விடை சொல்லும் படியாய் பார்த்தனர்.............
_________________________________________
மனோஜ்க்கு எப்படியாவது ஷிவானியிடம் பேச வேண்டும் என்ற ஆசை என்ன பண்ணலாம் என்று நினைத்தவனுக்கு ஒரு யோசனை வரவே எழுந்து அப்பாவிடம் சென்றான்....
ஏன்டா?அதான் எல்லாம் பேசி முடிச்சாச்சி இல்ல! அப்புறம் என்ன உம்முன்னு இருக்கா? பார்க்க சகிக்கல கொஞ்சம் புன்சிரிப்போட இரு...... அந்த இரண்டாவது பொண்ண பார்த்துமா எப்டி இருக்கணும்னு தோணல?????என்று அப்பா நகைத்தார்.
என்னங்க நீங்க வேற அந்த பொண்ண அவனுக்கு நினைவு படுத்தாதீங்க! என் கண்ணே பட்டுடும்.
புன்னகையோடு இருக்கா இல்ல என்று ரிஷானியின் வசை பாட ஆரம்பித்தனர் இருவரும்.....
இது மனோஜ்க்கு ஒரு மாதிரி இருந்தது
ஐயோ!கொஞ்சம் நிறுத்துறீங்களா ஒரு பொண்ணை பேசி முடிச்சிட்டு இன்னொரு பொண்ணை பற்றி பேசிட்டிருக்கிங்க?
எனக்கு ஷிவானியின் புன்னகையும் புடிச்சிருக்கு அவளையும் புடிச்சிருக்கு நல்ல குணமுடையவள் என்று புகழ்ந்தான்.
உடனே பெற்றோர் சிரித்துக்கொண்டே இததான்டா உன் வாயிலிருந்து எதிர்பார்த்தோம்,
வேணும்னுதான் வம்பிழுத்து பேசினோம் என்று சொன்னார்கள்........!
ஒரு முறைப்புடன் பெற்றோரைப்பார்த்தான் மனோஜ்!
சரி!சரி! நீ என்ன நினைக்கிறாய் என்று புரிகிறது ஷிவானிகிட்ட பேசணுமா?இந்தா கார் சாவி போய் அந்த பொண்ணை பார்த்து பேசிவிட்டு வா என்று தன் மகனை அனுப்பி வைத்தார் மனோகரன்.........
விதி தொடரும்...........