மின்னல் பிடித்த படம்

துளித் துளியாய்
விழுந்த மழை ....
துடியிடையாள்
மேனி நனைத்தது ....!!!

தேவதை அவள்
பைய நடக்கையில்
வான்வெளியில்
ஒளிரும் மின்னல் ....
பளிச் பளிச்சென
படம் பிடித்தது
பல கோணங்களில் ....!!!

இணையத்தில்
உலாவ விடலாம்
மின்னல்
எடுத்த படங்களை ...!!

மின்னஞ்சலிலும்
அனுப்பலாம் ....
மழை நனைத்த
பாவையின் படங்களை ....!!!

பொல்லாத பயபுள்ளை
இடியின் அடிதடியையும்
உடனிருந்தே படம்
பிடித்தவனாயிற்றே .......!!!

பெண்களே ...!!!
குடை மறைத்து
செல்லுங்கள் ....!!
மின்னல் கண்களில்
பட்டுவிடாதீர்கள் ....!!
ஒளி பாய்ச்சி
படமெடுத்து
முகநூலில்
போட்டு விடுவான் ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Apr-14, 1:10 pm)
பார்வை : 217

மேலே