பெருமகிழ்ச்சியில் பூத்தனளே

தென்னங் கீற்று உடலசைக்க
தென்றல் காற்று இடைதழுவ

வெள்ளி நிலா புன்னகைக்க
வெண் மேகம் அதைமறைக்க

மெல்லி டையாள் மனம்தவிக்க
மெழுகு வர்த்தி யாய்உருக

கெண்டை விழி படபடக்க
கெக்கலித்து உளம் சிரிக்க

செந்தமிழில் கவி பிறக்க
செங்கமலம் போல் சிவக்க

நெருங்கி அவன் அருகில்வர
நெற்றி முகர்ந்து முத்தமிட

பெண் மயிலாள் நாணமுற்று
பெரு மகிழ்ச்சியில் பூத்தனளே ....!!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Apr-14, 9:59 am)
பார்வை : 158

மேலே