சித்திரையே வருக

சித்திரையே சித்திரையே
முத்தமிழின் முதல்நாளே
சித்திரையே சித்திரையே
செந்தமிழின் முத்திரையே

எத்திசையும் உன்புகழை
இயம்பிடவே நீவருக
வித்தகர்கள் உனைதொழவே
வரங்கள் பல நீதருக

நித்தம் நித்தம் பயந்து வாழும்
நிலையினை நீ மார்ட்டிடுக
புத்தம் புது மனங்களை நீ
புவியல் நித்தம் விதைத்திடுக

இயற்கை தரும் பேரிடரை
இடையில் வந்து தடுத்திடுக
இன்பமன்றி துன்பமிலா
இனிய வாழ்வை தந்திடுக

விதியென்று நினைப்போர்க்கு
விளக்கமளித்து சென்றிடுக
மதிக்கொண்டு எதையும் மாற்ற
முடியுமென்ரு விளக்கிடுக

வாழ்க்கையே பணமென்று
வாழ்கின்ற மானிடரை
வழுக்கி விழும் நிலைமார்டி
வளமான தடம் தருக

சித்திரையே சித்திரையே
முத்தமிழின் முதல்நாளே
சிரிப்போடு நீ வருக
சிறப்பு பல நீ தருக

எழுதியவர் : பெல்நகர் பெ. அரங்கசாமி (12-Apr-14, 12:30 pm)
Tanglish : sithiraiye varuka
பார்வை : 96

மேலே