அன்னையின் வாலிபத் தாலாட்டு
ஆராரோ ஆரிரரோ ....
ஆரிராரோ ராரிராரோ ...
தாலாட்டு நான் படிக்க
தங்கமே நீ உறங்கு
மீளாத துயரென்று
வாழ்கையில ஏதுமில்லை
வாழ்கையே கனவப்பா
கண்மூடி நீ உறங்குமப்பா
லோல லோல லோலச்சு ....
லோல லோல லோலாயி
கண்திறக்கா காலத்தை
எண்ணிடாம நீயுறங்கு
நெஞ்சிலே பாய்த்த
வார்த்தையின் வலி
ரணமாகி முள்ளாய் மனதில் குத்த
உடன்பிறந்தவளின் வார்த்தையென்னி
உறங்காது கிடக்காதே...
லோல லோல லோலாயி...
ஆராரோ ஆரிரரோ ....
ஆரிராரோ ராரிராரோ ...
பெற்றவள் எனைவிட
பேச்சுக்கள் பெரிதாய் நீ பெற்றிடவில்லையடா...
இதற்கே மனமுடைந்தால்
இருக்கும் காரியம் நிறையவடா
தாலாட்டு நான் பாட கண்ணயர்ந்து நீ உறங்கு
லோல லோல லோலச்சு ...
லோல லோல லோலாயி
கண்ணே மணியே குலக்கொழுந்தே
முன்னேறு போனதுபோல் பின்னேறு வாருமடா
எப்போதும் நீ முன்னேறப் பாருமடா
உன்னை எண்ணித்தான் ...
பாதிகாலம் கழிஞ்சுபோச்சு
மீதிகாலம் நான் கடக்க
சுகமாய் நீ கண்ணுறங்க வேணுமடா ...
லோல லோல லோலச்சு ...
லோல லோல லோலாயி...