விரும்புகிறேன்
ஆழ்கடலில் மூழ்கிக்கொள்ள விரும்புகிறேன்.
உன் நினைவுகளின் வெப்பம் தாங்காமல்...
கடற்கரை மணலில் புதைந்து கொள்ள விரும்புகிறேன்.
உன் நினைவுகளின் பாரம் தாங்காமல்....
நிலவில் ஒளிந்துக் கொள்ள விரும்புகிறேன்.
உன் நினைவுகளின் தாக்கம் தாங்காமல்....
நெருப்பின் நடுவே சிறை இருக்க விரும்புகிறேன்.
உன் நினைவுகளின் ஈரம் தாங்காமல்....
ஆனாலும் எனக்குத் தெரியும்.
இவைகள் எல்லாம் என்னைக் காத்துக்கொள்ளாது
உன் நினைவுகளின் துரத்தல்களில் இருந்து