இனிய இல்லம்

எடுத்த பொருளை
எடுத்த இடத்தில வைத்து

சோம்பல் இல்லாமல்
சுறுசுறுப்பாய் சுத்தம் செய்து

பட்டியலிட்டு வரா வாரம்
பங்காய் சுத்தப்படுத்தினால்

பள பளப்பாய் மின்னும் உங்கள் இல்லம்
பார்ப்பவரை இழுக்கும்

இல்லத்தின் சக்தி கூடும்
இல்லத்தரசியின் பெருமையும் கூடும்


எங்கள் வீடு தலைப்பில் படமாக

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (13-Apr-14, 10:55 pm)
Tanglish : iniya illam
பார்வை : 348

மேலே