தேடல்
வெற்றிடம் தேடும் காற்றை போல்
உண்மையைத் தேடி அலைப்பாயும் என் மனம்
ரத்தம் உருஞ்சும் கொசுக்கள் போல்
தீயவர்களின் திருவிளையாடலைத் தேடி .....
''வாய்மையே வெல்லும் '' என்ற சக்திமிகுந்த வார்த்தைகள்
அணுவளவும் இல்லாமல் போய்விடுமா வருங்காலம் ?
என்று வாய்மைக்காக வாழும் உள்ளங்களைத் தேடி
செல்கிறது என் தேடல் பயணம்
பேதைமையின் பிடியில் வாழும் இக்காலத்தை
மாற்றலாம் என்று நினைக்கிறது இந்தத் தேடல்
என் தேடலின் அர்த்தத்தைப் புரிந்துக்கொண்டால் போதும்
இந்தத் தேடல் புனிதத் தேடலாக எனக்கு அமையும் .