அன்பு ஆசிரிய குலமே
உறவாட நான் வருகிறேன்
உம் அன்பை போல் வேறேது கவிதை?
மாணவர்கள் அனைவரையும் சுமக்க
ஏதம்மா உமக்குப் பெரிய கருவறை ?
உம் ரத்தமும் எம்மில் கலக்கவில்லை
எப்படி எம் மேல் இவ்வளவு பாசம் ?
நீர் பாடம் நடத்தும் வேளையில்
பரிதியும் ஓளி வீச மறந்ததே அதிசயம்!
அன்பால் அரவணைக்கும் வித்தையை
எங்கிருந்து கற்றீரொ?
நாங்கள் கடவுளின் குழந்தைகளென்றால்
ஆசிரிய குலமே !
நாங்கள் உம்முடைய குழந்தைகளோ ?