தேர்தல் பிரச்சாரம்
வாக்காள பெரு மக்களே ..
தாய்மார்களே ..
உடன் பிறவா சகோதரர்களே சகோதரிகளே ..
எங்கள் சின்னம்
தேர்தல் சின்னம்
உங்கள் சின்னம்
வாக்கு சின்னம்
மறந்து விடாதீர்கள்
எங்களை தேர்தல் முடியும் வரை
மறந்து விடுவோம் உங்களை நாங்கள்
தேர்தல் முடிந்த பிறகு
உ(எ )ங்களுக்காக
வெயில் பாரமால்
செலவு பாராமல்
வீதி வீதியாய்
வாக்கு கேட்டு
வாடி வதந்குகின்றோம்
ஆட்சியை பிடித்த பிறகு
உங்களை வதங்க விடுவோம்
மறந்து விடாதீர்கள் உங்கள் சின்னம் வாக்கு சின்னம்
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
என்ற பாடலோடு வாகனம் முன்னேறுகின்றது