தமிழணங்கே வாரீர்

ஜய ஜய தமிழுக்கு மாலை சூடு
===விஜய வருடத்தை போக விடு !
ஜய ஜய கூவிய கவி பாடு
===சித்திரை பிறந்த புகழ் பாடு !

விறு விறு வீட்டை பெறுக்கிவிடு
===வேண்டா பொருள்களை நீக்கி விடு !
சுறு சுறுப்பாக செயல் படு !
===சோம்பலை விரட்டி ஒட்டி விடு !

சித்திரைப் பெண்ணே வருக
===சீரும் சிறப்பும் பெறுக,
முத்திரை பதிக்க வருக
===முத்தமிழ் போற்ற வருக !

தமிழினம் ஒன்றி வாழ்ந்திட
===தருவோம் தத்தம் பங்களிப்பை,
தமிழன் மேதினி பெருமை பெற
===தொடுப்போம் கரமிணை சங்கிலியை !

சரவெடி போல் முழக்க மிடு
===தரணியில் தமிழன் குறுக்கப்பட்டால்!
உரத்த குரலில் உறுதி எடு
===உலகத் தமிழன் நலம் காக்க !

எழுதியவர் : படைகவி பாகருதன் (13-Apr-14, 9:25 pm)
பார்வை : 5213

மேலே