ஜய வாழ்த்துக்கள்
என்னாளும் உய்ய வளம்,
எப்போதும் கொள்ள நலம்
யாவர்க்கும் நல்லவண்ணம்,
வழங்கவரும் ஜய வருடம் !
எழிலெண்ணம் உயர்ந்தோங்க,
இயற்கை வளம் வானோங்க
செழிப்போடு நாம் வாழ,
ஜெயமாக்க வரும் வருடம் !
நம் வாழ்வில் நலம் சேர்க்க
வந்த தமிழ்ப் புத்தாண்டை
நல் வரவு செய்திடுவோம்
நனி சிறக்க உயர்ந்திடுவோம் !
வாழ்க வளமுடன்