புதிரான புதுமை வேண்டும்
பனங்காய் மரம் எனக்கு பணங்காய் மரமாக வேண்டும்
பாலைவன சோலை பழமுதிர் சாலையாய் வேண்டும்
பித்து தமிழ் என் முத்து காதலியாய் வேண்டும்
பீடித்த நோயெல்லாம் பிறவா வரம் பெற வேண்டும்
புன்னகையை மிஞ்சும் பூந்தளிர் வேண்டும்
பூமிதனின் சுழல் மேற்கில் வேண்டும்
பெறாதுன்பங்கள் வரா இன்பங்களாக வேண்டும்
பேடைகுயில் மணியோசையில் இவன் துயிலோசை எழ வேண்டும்
பைம்புல் நிமிர்ந்து நாண வேண்டும்
பொறையுடைமை இவன் தனியுடமையாக வேண்டும்
போற்றி தூற்றி போற்றல் தூற்றல் வேண்டும்
பௌதீகத்தில் இவன் கூற்றும் வர வேண்டும்
ஜெய அபிராமி தாயே அருள்வாயாக ….!!
எனக்கொரு புதிரான புதுமை இப்புத்தாண்டில் புரிய வேண்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
எம் நண்பர்களுக்கு ..