கொல்லும் சொல் வெல்லும் சொல்
விலகிடும் எண்ணமே இல்லையா
என்னை விட்டு வறுமையே -
துளையிட்டு சன்னமாய் ஆக்குவதில்
என்ன இன்பப் பெருமையோ
களைவிட்டு கன்னமே குழிந்திட
பகைக் கொண்டு ஒட்டிய அட்டையா நீ
பிழை கொண்ட வழியேதுணையாய்
சோகைத்தொட்ட குருதிச் சக்கையா நான்
வழிவிட்டு வழிவிட்டு விலகிடு
வருத்தமே இல்லாமல் என்னுயிரே!
தணியவே அடங்கவே வறுமையின்பிடி
பொருத்தமே இது என்னுயிரே!
வறுமையின் சினம் கொண்டு
மனமது மனம்விட்டு கூறிய
வார்த்தைகளே இவை!
வறுமையோடு படைகொண்டு
வாழ்க்கையில் தடை வென்று
வீரத்தோடு நடைபயின்று
விடியலாய் விளங்கிடவே
வைத்துவிடு வறுமைக்கு துறவுத்தீ!!
தன்மானம் மனதிடம் கூறிய
பொன்மொழிகள் இவை!