காதல்

வாழும் நாளில் காதல்
இன்றி யாரும் வாழ்ந்ததில்லை...!!
கடவுளுக்கும் காதல் ஒரு
மனம் சுமக்கும் நல்லதவமே...!!
வலியும் இழப்பும் காதல்
பெற்ற அன்பின் வரமே...!!
ஒருவர் மனதில் சுமந்தாலும்
காதல் என்றும் சுகமே...!!
காதலின் மகத்துவம் புரியாத சிலரால்
காதல் என்றும் புனிதம் இழக்காது...!!
காதல் குறையாத வயதால்
மனதில் சாகாமல் வாழும்...!!
காதல் என்ற உறவு
உன்னில் இருக்கும் அன்பின் உணர்வு...!!
மனதின் மாறாத நினைவுதரும்
களவு போகா பொக்கிஷம் காதல்..!!!
!!...கவிபாரதி...!!