உண்மையாதெனில் 0தாரகை0

வெப்பத்தின் தாக்கத்தால்
உப்பான கடல்நீரும்
ஆவியாகி மேல்சென்று
மேகமாகி மண்மீது
இனிக்கும் மழைத்துளியாய்
ஜகத்தை நனைத்திடும்.
சுவைமாற்றம் எவராலே?

கோமாளி மீன்கள்
எல்லாமே ஆண்கள்
இருபதில் ஒன்று
இணைவதற்கென்று
பெண்தன்மை பூண்டு
மீன்குஞ்சை ஈனும்
இடைவந்த தாக்கம்
எவராலே அறிவாயோ?

மண்ணில் விளைந்த பொருள்
மாந்தர்க்கு உணவாகி பின்பு
மண்ணில் சேர்ந்தவுடன்
மண்ணோடு மக்காமல்
மறுவிளைச்சல் ஆக்கம்
யாராலே அறிவாயோ?

ஒருமுறை உறவுகொண்டால்
மறு உறவு தேடாமல்
உயிர் உள்ள வரையிலும்
நீங்காது நிலைத்திடும்
நற்பண்பை நரிக்கூட்டம்
கற்றதுதான் எவரிடத்தில்?

காலமாற்றம் தேவைகருதி
பல்லாயிரம் மைல்தூரம்
பாதையை நன்கறிந்து
பறந்துவரும் பறவை இனம்
முட்டை இட்டு குஞ்சு பொறித்து
முடிந்தவுடன் திரும்பி ஓட்டம்.
வழிகற்றது எவரிடத்தில்?

உடல் தாகம் ஏற்பட்டு
ஈருடல் உறவாட
ஓருயிர் உருவாக
ஆறறிவாய் வெளியாக
அதிசயத்தை என் உரைப்பேன்
எவராலே அறிவாயோ?

பூலோகம் கால் பாதிக்கும் முன்னே
பூமியை நடைபயில விரித்தவன்
வானை தலைதட்டாமல் உயர்த்தியவன்
காற்றை மூச்சு முட்டாமல் வசப்படுத்தியவன்
யாரவன் யாரவன் யாரவன்?

எழுதியவர் : தாரகை (15-Apr-14, 10:27 am)
பார்வை : 166

மேலே