உனக்கு என்னை பிடிக்கவில்லை
உனக்கு என்னை பிடிக்கவில்லை
எனக்கு வெறுக்க தெரியவில்லை
என்னை நீ மறந்தால்...
மனம் இறக்க துடிக்குதடி
என் நேசத்தை நீ அளந்தால்
இந்த உலகம் போதாதே
என் பாசத்தை நீ உணர்ந்தால்
சொர்க்கம் தனியே கிடையாதே
உன் ஒற்றை சொல்லுக்குள்
என் வாழ்க்கை உள்ளதடி
உன் கற்றை குழலுக்குள்
என் காதல் தொலைந்ததடி