என் ஒரேவொரு காதல்

இதை காதல் என்று நான் நினைக்கவில்லை
அதை சொல்ல வேறு வார்த்தை இல்லை..

இதை காதல் இல்லை என்று என்னை நானே ஏமாற்றிகொன்டாலும்,
என் இதயம் உன் பெயரை அழைத்துக்கொண்டேதான் இருக்கிறது...

நான் உன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும்போதெலாம்,
நீ
என்னை ஒரு அடி தள்ளி வைகிறாய்..

ஒவ்வொரு நொடியும்
என் இதயத்தில்
வளரும் உன்னை
என் மூச்சாக சுவாசிக்கிறேன்..

உனக்காக காத்திருந்த அந்த நாட்கள் என்னை காயபடுதியும்,
என் இதயம்
உன்னை விட்டுகொடுக்க மாறுகிறது..

ஒரு காதல் தான் ஒரு வாழ்க்கையில் உள்ளது என்றால்
என் மனம் மாறும் என்ற நிலை இல்லை...

உனக்கான என் ஒரு காதல்,
ஒரேவொரு காதல்...
இறுதியாக,
இதோ உன்னிடமே கொடுக்கிறேன்..

ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில்...!!!

எழுதியவர் : அஸ்லுனா (16-Apr-14, 11:34 am)
பார்வை : 105

மேலே