மோதல்

காதலில் மட்டுமல்ல
கருத்திலும்
உண்டு மோதல்
காதலின் மோதல்
இளமையை தூண்டி விடும்
கருத்தின் மோதல்
ஈகோவை தூண்டி விடும்....
இறுதியில்
காதலின் மோதல்
கண்ணீரில் கொண்டுவிடும்
கருத்தின் மோதல்
நட்பில் ஊடலாய் ஊசலாடும்
இரு மோதலும்
இளமையின் வேகம்
சுயம் தேடும் தாகம்