தேர்ஆறுதல் கவிதைகள்

தரை இறங்கும் ஹெலிகேப்டர்…!
*
ஆரத்தி எடுத்தப் பெண்கள்
ஆக்ரோஷமாய் கத்தினார்கள்
பணம் பட்டுவாடா தகராறு.
*
புதுசா என்ன இலவசம்?
அறிவிப்பு வருமென்று
எதிர்பார்த்தார்கள் ஏழைகள்.
*
ஹெலிகேப்டர் இறங்க இறங்க
தலைஎணங்கி நிற்கிறார்கள்
தன்மானத் தமிழர்கள்.
*
சின்னங்களை வரவழைத்து
மாஜிக் காட்டினான்
வியந்துப் பார்க்கிறது கூட்டம்.
*
இந்திய வாக்காளர் பட்டியல்
சிறந்தத் தொகுப்பாக
கின்னஸ் தேர்வு.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (17-Apr-14, 8:52 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 91

மேலே