நிலவின் தொலைவில் நிஜங்கள் மனதின் அருகில் நினைவுகள்
உன் மேல் பட்ட காற்று தென்றலாய்! மாறி
என்னை வருடும்! தொலைவில் இருந்த போது உன்னை அறியவில்லை!
தொலை பேசியில் கூட தொடர்பு கொள்ள முடியாத, தொலைவில் நீ ! இருந்தும் உன்னை நினைக்கிறேன்!
மனம் இருந்தும் உன்னை நினைக்கவில்லை.
நினைகிறேன்! அருகில் நீ இல்லை.
இருப்பதை விட இல்லாத ஒன்றைத் தேடுவது தான்!
மனித இயல்பு?
இதை இயல்பு என்று நினைத்து விடாதே !
என் "இதயம்" ஒவ்வொரு நிமிடமும் பேசும் மொழி!
நேரில் உன்னைப் பார்க்க முடியாத போதும்
நீ என் நினைவில் நிஜமாக வருவதும் சுகம் தான்!
என் இதயம் என்னை கேட்காமல் எல்லை மீறி! துடித்தது உன்னைப் பார்க்கும் போது மட்டும்.
இயல்பாக துடித்தது உன்னைப் பார்க்காததால் !
இதனால் தான் நீ ! நான் பார்க்காத தொலைவிற்கு சென்று விட்டாயோ?
நான் வாழ்வது என் இதயத் துடிப்பால் மட்டுமல்ல
என் இதயத்தினுள் இருக்கும் உன் (நினைவுகள்)உயிரால்......