விகட கவி வார்த்தை போல வரும் கவிதைகள்

முன் குறிப்பு : படிக்கும் முறை பற்றி படித்து விட்டு படிக்கவும் .

1. நீ சிவா சுப நிலைநீ
நிலைநீ பசு வாசி நீ

2. நீ ராதா ரீமா நீரே நீ
நீரே நீ மாரீ தாரா நீ (ரீமா -துர்க்கை )

3. நீ ராமநாமா பத வாசா நீ
நீ சாவா தப மா நாம(ரா) நீ

4.நீ வேதா பிரேமா ராமா
மா( ரா மரே(பி தாவே நீ

5.நீ லாபா சுப நிலை நீ
நிலை நீ பசு பாலா நீ

***************************************************************************
1.படிக்கும் முறை :1. நீ சிவா சுப நிலைநீ
நிலைநீ பசு வாசி நீ

1.இதை விகட கவி வார்த்தையை எப்படி முன் இருந்தும் பின் இருந்தும் படிப்போமோ அப்டி படிக்க வேண்டும்
2. முதலில் 1.நீ 2. சி .3. வா 4.சு 5. ப ----இந்த வரிசையில் படி க்கவும்
3. இப்பொழுது கடைசியில் இருந்து படிக்கவும்

''''''''பசு வாசி நீ''''''''
இந்த வரியை கடைசியில் இருந்து படிக்கு பொழுது நாம் இப்படி படிப்போம் 1.நீ 2.சி 3. வா 4.சு 5.ப என்று படிப்போம் அப்படி படித்தால் ஒரே வரி போல் வரும் ....இதையே முன் இருந்து பின் இருந்து படித்தல் ஒரே போல் வரும் விகட கவி வார்த்தை போல் வரும்'''
**************************************************************************
பொருள் : 1. நீ சிவா சுப நிலைநீ
நிலைநீ பசு வாசி நீ
நீ சிவன் மற்றும் சுபத்தின் நிலையாக இருப்பவன் நீ
மேலும் பசு என்பது ஜீவன்களை குறிக்கும் அதனால்
ஜீவனும் நீ வாசி என்பது பிராணன் வாசி யும் நீ
2.. நீ ராதா ரீமா நீரே நீ
நீரே நீ மாரீ தாரா நீ
நீயே ராதா தேவி ரீமா (துர்க்கை) நீரே நீ
நீரே நீ மாரீ(மாரி அம்மன் ) தாரா என்பது நக்ஷத்திரம் என பொருள் படும் தாரா நீ
3. நீ ராமநாமா பத வாசா நீ
நீ சாவா தப மா நாம(ரா) நீ

நீயே ராம நாமத்தின் பதங்களில் வசிப்பவன்..நீயே சாவாத தபமும் நீ மா நாமும் நீயே பிரம்ம நாமம்
4.நீ வேதா பிரேமா ராமா
மா( ரா மரே(பி தாவே நீ

நீ வேத மும் பிரேமா ராமனும் நீ
மா ராமரே பிதா வே நீ
5.நீ லாபா சுப நிலை நீ
நிலை நீ பசு பாலா நீ

நீயே லாப சுப நிலை நீ நீயே பசு பாலன் (ஸ்ரீ கிருஷ்ணன் )

எழுதியவர் : குரு வருள் கவி (17-Apr-14, 6:31 pm)
பார்வை : 304

மேலே