நகைச்சுவை 109
கடற்கரையில் காதலனும் காதலியும் அமர்ந்திருந்தனர். நீட்டிவைத்திருந்த கால்களில் ஓடிவந்த அலைகள் தழுவிச்சென்றன. காதலியின் முகம் மகிழ்ச்சியில் இருப்பதைக்கண்டதும், காதலன் அவள் கன்னத்தில் "இச்" என்று ஒரு முத்தம் கொடுத்தான். மிகுந்த நாணத்துடன் அவள், "என்ன இது .. நாலு பேர் பார்த்தால் ன்ன நினைப்பார்கள். இதை எல்லாம் கல்யாணம் ஆனபிறகு செய்யலாம் என்றாள். அதற்கு அவன், "எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது" என்றான்.

