நகைச்சுவை 110
அடுப்பில் பால் பாத்திரம் வைத்து பாலை அதில் ஊற்றிக்கொண்டிருக்கும் பொழுது கைபேசியில் அழைப்பு வந்தது.
மனைவி கணவனிடம் வந்து, "அடுப்பில் பால் வைத்திருக்கிறேன். பொங்கிவழியாமல் பார்த்துக்கோங்கோ" என்றாள்.
"பொங்கினா என்ன செய்வது என்று கணவன் கேட்கவும், "பக்கத்தில் தண்ணீர் இருக்கிறது. அதிலிருந்து கொஞ்சம் விட்டால் போதும், பால் பொங்காது" என்று சொல்லி கைபேசியில் பேசத்தொடங்கி விட்டாள்.
கைபேசியில் பேசிமுடித்துவிட்டு மனைவி வந்து பார்த்ததும் திடுக்கிட்டாள்.
ஏன் தெரியுமா .... ?
.
.
.
.
.
.
அரை லிட்டர் பாலில் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்திருந்தான் கணவன்.