மறதி - மணியன்

டாக்டர். . . நான் என்ன பேசுறேனோ எனக்கு உடறுக்குடன் மறந்து விடுகிறது.

நோ ப்ராப்ளம்.குணப்படுத்திடலாம். எத்தனை நாட்களாக உங்களுக்கு இந்த வியாதி இருக்கு.

எந்த வியாதி டாக்டர். . .

அதான் இப்ப சொன்னீங்களே. என்ன பேசினாலும் உடனுக்குடன் மறந்து விடுகிறது என்று. , அதைத்தான் கேட்கிறேன்.

நீங்க என்ன கேட்கிறீங்க. . எனக்கு சுத்தமா புரியல டாக்டர். . . . நான் ஏதாவது வியாதி பற்றி சொல்லியிருந்தால் அதை எப்படியாவது குணப் படுத்திடுங்க டாக்டர். . .

இப்பவாவது சொல்லுங்க . . . வியாதி பற்றி என்னிடம் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கா ?. இல்லையா ?.

டாக்டர். . . நான் என்ன பேசினாலும் எனக்கு உடனுக்குடன் மறந்து விடுகிறது. நீங்கதான் எப்படியாவது குணப்படுத்தனும்.

? . . . . ! . . . . ? . . . . , ! . . . . . ? .



*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (18-Apr-14, 11:31 pm)
பார்வை : 229

சிறந்த நகைச்சுவைகள்

மேலே