கல்லும் கடவுளும்
கல்லை செதுக்கி
சிலை வடித்தான் சிற்பி
கடவுளாக பாவித்து
வேண்டியவை வேண்டினான் !!
கடவுள் அசைவேனா என்றது !!
கோபமும் ஏமாற்றமும் சிற்பிக்கு..
சிற்பம் அப்போதும் இப்போதும்
“கல்” தான் !!
செதுக்குமுன் கல்லாகவும்
பின்னே கடவுளாகவும் பார்த்தவன் சிற்பி !
யார் தவறு ???