புத்தாண்டில் ஒரு லட்சியம்

இன்டர்நெட் தொடர்பு பெறுவதில் தாமதமாகிவிட்டதால் தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட முடியாமல் போய்விட்டது . இருந்தாலும் நமது எண்ணம் மற்றவர்களுக்கு சேர வேண்டும் குறிப்பாக மாணவர்களுக்கு . இது நான் 1984 தமிழ் புத்தாண்டு க்கு எழுதிய கவிதை .

புத்தாண்டில் ஒரு லட்சியம்

புத்தாண்டு மலரது மலர்ந்தது மலர்ந்தது
திக்கெட்டும் அதன் மணம் தவழ்ந்தது தவழ்ந்தது
இனிதான இந்நாளில் புவிபோற்ற நாம் வாழ
குருதியிலே உறுதி சேர்ப்போம் வாரீர்! வாரீர் !!

வந்தோம் இருந்தோம் போனோம் என்று
வாழ்வது வாழ்வல்ல !
தோற்றம் மறைவில் போற்றும் வகையில் ஏற்றமுடன் வாழ்வோம் வாழ்வோம் .!!
பாரெங்கும் தீராத பாராட்டு
நாடெங்கும் நாள்தோறும் புகழாரம்
இன்பமது வழிந்தோடும் விழியோரம் அந்நேரம்
காலமது தூரமில்லை
ஞானமுண்டு நமதிடத்தில்
கதிரின்றிப் பயிர் வாழ !
நீரின்றி நிலம் விளைய !!
வழியொன்று நாம் கண்டு
விண்ணுயரப் புகழ் சேர்ப்போம்
அவரவர் துறையின்
தனித் திறம் அதைப் பெற்றுத்
திகழ்ந்திடுவோம் .

எழுதியவர் : கவிஞர் மதுரோடு இளங்கோவன் (18-Apr-14, 9:19 pm)
சேர்த்தது : ILANGOVAN
பார்வை : 624

சிறந்த கவிதைகள்

மேலே