மன வீதி கவிஞனுக்கு

மன வீதி கவிஞனுக்கு
மாண்டு விட்டாலும்
புகழ்வீதி அவனுக்கு
மலர்வீதி மஞ்சள்
குங்கும மங்கையர்க்கு
மார்கழி கோலவீதி
தாவணி தங்க ரதிகளுக்கு
விழிவீதி காதலுக்கு
விரும்பும் இரு நெஞ்சங்களுக்கு
பொன் வீதி ஆதவனுக்கு
காலையிலும் அந்தி மாலையிலும்
பொய் வீதி கவிதைக்கு
பூப்பூவாய் நெஞ்சினில் பூப்பதற்கு !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Apr-14, 3:51 pm)
பார்வை : 196

மேலே