நீ இல்லாத உலகம் எனக்கேதடி
வட்ட நிலா சுட்டது
வானம் கூட வெறுத்தது
வாச மல்லி வாடிப்போச்சு
வாசலும் தான் இருட்டாச்சு
ரோஜாவை உதிர்த்து
காலில் முள் தைத்தால்
உனைக் காணாத போது சுகமே
நீ சூடாத மலரும் சுடுதே !
ஆறாத ரணமாய் நீ
நெஞ்சுக்கூட்டின் அரியாசனத்தில்
மாறாத காதல்
மன்றாடும் உயிர்
அறிவுரை தந்தவள்
படுகுழியில் தள்ளுதல் முறையோ
உறவை தேடி வந்த எனை
இலவை காத்த கிளியாக்கியது ஏனோ !!