எல்லாமும் நீயே

எல்லாமும் நீயே

ஆறு வயதுக்குப் பின்
அனுபவிக்க முடியாத தாய்மடி,

தவழ்ந்து எழுகையில் தவறவிட்ட
தந்தையின் கைவிரல்கள் ,

கைகளைப் பிடித்து தமிழ் எழுதக்
கற்றுக்கொடுத்த தமயந்தி டீச்சர் ,

எட்டு வயது காதலியிடம்
கிட்டாத முத்தம் ,

தூக்கத்திற்கு தலையணையாய் ,
துக்கத்திற்கு உறுதுணையாய் ,
தோழன் கொடுத்த தோழ்கள் ,

அமாவாசை என்றறியாமல்
அடம்பிடித்துக் கேட்ட நிலாச்சோறு ,

பாதுகாக்க தெரியாததால்
பறிகொடுத்த பட்டாம்பூச்சி ,

பறக்கவிடத் தெரியாத
பனையோலை காத்தாடி ,

கள்ளிச் செடியில் கிறுக்க நினைத்த
பள்ளிக் காதலியின் பெயர் ,

மரக்கிளையில் செதுக்கிய என்
முதல் கவிதை ,

என நான் இழந்தவற்றைப் பட்டியலிட்டால்
இந்தப் பக்கங்களும் போதாது ,
இன்றைய நாளும் போதாது.

என் இருபது வயதில்
எங்கிருந்தோ வந்தாள்

காதல், கனவு, காமம்,
சுவாசம், சுதந்திரம் , சுயமரியாதை,
பனித்துளி, பால் நிலவு, பகல் தூக்கம்,
தவம், தாகம், தன்னம்பிக்கை,
மஞ்சள் வெயில், மழைத்துளி, மண்வாசனை,
மோகம், மேகம் என
மொத்தமும் அவளை மாறினாள்

இன்று ......
எங்கு போனாள்...? என்ன ஆனாள்..?
ஏன் போனாள் ..? எப்படி இருக்கிறாள் ..?
நிமிடங்களுக்கு நூறுமுறை
என்னை நானே கேட்கிறேன்....

இதயத்தைப் பிடுங்கிவிட்டு அது
இருந்த இடத்தில்
கள்ளி செடியை நட்டுவிட்டு
கண்காணா தூரம் போய்விட்டாள்.

கள்ளிச் செடியானாலும்
வைத்தது அவளல்லவா ...!!
இரட்டை ரோஜா பூக்குமென்று
இன்றும் கூட காத்திருக்கிறேன் ......

எழுதியவர் : அருண்கார்த்திக் (19-Apr-14, 9:48 am)
Tanglish : ellamum neeye
பார்வை : 152

மேலே