கூழாங்கற்கள் புதுக்கவிதைகள்

*
கூழாங்கற்கள் { புதுக்கவிதைகள் }
*
நேசிப்பவர்கள்
எப்பொழுதேனும்
எப்பிரச்சினையாலோ
பிரிந்து விடுகிறார்கள்
எந்தத் தயக்கமு மின்றி
பிரிந்தவர்கள்
எப்பொழுதேனும்
சந்திக்க நேர்கையில்
பேசிக்
கொள்பவர்களும் உண்டு.
பேசாமல்
முகத்தைத் திருப்பிக்
கொள்வாரும் உண்டு.
நேசிப்பது உறவு
பிரிவது துறவு.

2
நேசிப்பவர்கள்
இருவருமே
நேர்மையாகவே
நேசிக்கிறார்கள்
நேசிப்பவர்களுக்குள் தான்
எப்படியோ?
அந்த நேசிப்பில்
முரண் வந்து
முன் நிற்கிறது
முரண்களில்
முகிழ்வது தான்
காதலோ?.
3.
குழந்தைகளின்
நேசிப்பில்
எந்தக் கல்மிஷமும்
இருப்பதில்லை.
கூளமாய் மண்டிக்
கடக்கிறது
மனிதர்களின்
நேசிப்பில்
ஆயிரமாயிரம்
கல்மிஷங்கள்…!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (19-Apr-14, 8:32 am)
பார்வை : 90

மேலே