மாரி வரட்டும் தாலி ஏறும்

எட்டு எட்டா எடுத்து வச்சு
என் உயிரை படைச்சு புட்டான்
பட்டு மேனியை தான் சூரியன்
சுட்டு சுட்டு கருத்துபுட்டான்...!

வெட்டவெளிக் காட்டுக்குள்ள
பட்டபகல் நேரத்தில
பருத்தி துணியுடுத்தி
பக்குவமா வந்து நின்னா...?!!

பழங்கஞ்சி குடிச்சாலும்
வெங்காயம் கடிச்சாலும்
களைப்புத் தீருமடி
உன்மடியில் நான் படுத்தா...!

வண்டி கட்டி வந்து நானும்
வாழ்க்கை ஒன்னும் தரேன் புள்ள..!
வருத்தமுடன் இருக்காதே
வயலை நினச்சு நீ அழுவாதே...!!

கறந்த பசுவெல்லாம்
மடிவத்தி காஞ்சுடிச்சி
பசுமை கதவடைச்சு
பலகாலம் ஆகிப்போச்சு...!!

வானத்தில் போரின்றி
வனமெல்லாம் சுருண்டு போச்சு !!
இழந்த இலங்கை தமிழனை போல்
எனக்கும் இருந்தும் இல்லையடி... !!

கண்மணி காத்திரு
கார்முகில் வருதானு பாத்திரு
மின்னல் வெட்டட்டும்
மேளம் கொட்டி நான் முடிப்பேன் ...

எழுதியவர் : கனகரத்தினம் (19-Apr-14, 12:21 pm)
பார்வை : 481

மேலே