அவள் எனக்கு வேண்டும்-3

"இப்ப இவளையும் அவ தாய்மாமனுக்கு கட்டிக் குடுக்கப்போறதா கேள்வி!" என்றாள்.
அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது.
ஏனிந்த படபடப்பு என்று புரியவில்லை.
அப்படியே ஷோபாவில் அமர்ந்தவனை புரிந்து கொண்டவள் போல் பார்த்த பாட்டி,
"உங்க தாத்தாதான் ஊருக்கு பெரிய மனிதர்.. நீ என்னடான்னா.. என்ன சிவா ஏதாவது சொல்லுப்பா.." என்ற பாட்டியிடம்
"தெரியில பாட்டி", என்றான்.
"நீ அங்க எப்ப பார்த்தாலும் ஆஸ்பத்திரியிலேயே இருக்கியேன்னுதான் உங்க அப்பா இங்க ரெஸ்ட் எடுக்க அனுப்பினான். லீவு முடிஞ்சி நீ ஊருக்கு போயிடுவ.. வந்தமா ஜாலியா இருந்தோமான்னு தாத்தாவுக்கு ஒத்தாசை பண்ணிக்கிட்டு இரு.. அங்க உங்கம்மா பொண்ணு பார்த்து இருக்கிறதா வேற சொன்னா.. நல்ல பையனா இரு.. இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் வேண்டாம்", என்ற பாட்டி
"இது வயசுக்கோளாறு தானா சரியாயிடும் போ", என்றாள்.
"இல்ல பாட்டி இதுவரைக்கும் யார்கிட்டேயும் ஏற்படாத ஒரு உணர்வு அவள பார்த்த உடனே வருது.. அது அது எப்படி சொல்லுவேன்.."
"சரி சரி புரியுது.. ஆனா அவ அப்படி நினைக்கிற மாதிரி தெரியிலயேடா", என்றாள்.
"அது அது எனக்கு தெரியில பாட்டி", என்றான்.
"அவள எனக்கு பிடிச்சிருக்கு.. அவள எனக்கு கல்யாணம் பண்ணி வை", என்றான் சிவா.
திடுக்கிட்டாள் பாட்டி.
"சிவா!", என பாட்டி அழைக்க,
"என்ன பாட்டி?"
"உங்க தாத்தா வர்றாரு.. போ போய் டிவிய போடு", என்றாள்.
"என்ன பாட்டியும் பேரனும் என்ன பண்றீங்க?", என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் பெரியவர்.
"நாளைக்கு ஒரு வேலையா வெளியூருக்கு போகணும். நானும் நம்ம துரையும் தான் போறோம். நான் போய் துரைய கொஞ்சம் பார்த்துட்டு வரேன்", என்று அவர் கிளம்ப,
"இருங்க நானும் வரேன். பெரியவள பார்த்துட்டு வருவேன். சிவாவையும் அழைச்சிட்டு போலாம்" என்று சொல்ல
"ஏன் அவன் எதுக்கு?", என்று தாத்தா சொல்ல,
சிவாவும், "நான் வரல பாட்டி. நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க", என்றான்.
"டேய்"
பாட்டி கிட்ட வந்து, "கோமதி வீட்டுக்கு", என்று சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட
"பாட்டி ஒரு நிமிடம்", என்று சொல்லி உடைமாற்ற சிவா சென்றுவிட,
"சரி வா நாம போலாம்", என்று தாத்தா பாட்டியை அழைக்க,
"ஒன்றும் பேசாமல் சரி வாங்க"
"தம்பி சிவா! நானும் தாத்தாவும் கொஞ்சம் வெளிய போய்ட்டு வர்றோம்",
என்று சொல்லிக்கொண்டே நடக்க,
"பாட்டி நானும் வரேன்", என்று சிவாவும் ஓடி வந்தான்.
"தாத்தா என்னடா இப்பதான் வரலன்னு சொன்ன.. சரி வா வா", என்றார்.
இவர்களை பார்த்தவுடன் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
கோமதியின் அப்பா துரை, சிவாவை பார்த்து, "வாங்க தம்பி! அம்மா அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க? இந்த ஊரு உங்களுக்கு பிடிச்சிருக்கா!", என்றார்.
"அவனுக்கென்னடா.. டாக்டராச்சே.. இங்கேயே ஒரு ஆஸ்பிட்டல் கட்டி வைத்தியம் பார்க்க போறானாம்", என்று பாட்டி சொல்ல
அது தாத்தாவுக்கும் பேரனுக்கும் புது செய்தியாக இருந்தது.
பேரன் பாட்டியை பார்க்க, அமைதியாக இரு என்ற தோரணை தெரிந்தது.
"அதுக்கென்ன தம்பி. நல்ல செய்திதான். ஆஸ்பிட்டல் கட்டிட்டா போகுது. கண்டிப்பா என்னோட ஆதரவும் உண்டு", என்றார்.
அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, கோமதி டீ எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டே வர அவனுக்கும் கொடுக்கும் போது
"எடுத்துக்கோங்க", என்று அவள் சொல்ல
அவன் எடுத்துக்கொண்டே அவளை பார்த்து கண்ணடிக்க, அவள் கையில் உள்ள தட்டு நடுங்குவதை பார்த்த பாட்டி, பட்டென தட்டை வாங்கிக்கொண்டு
"உட்காரு", என்றாள்.
"ஏன்பா துரை! இவளுக்கு இன்னும் இந்த டாக்டர் பயம் போகலையா?" என்று தாத்தா கேட்க
"கொஞ்சம் பரவாயில்லப்பா.. இப்போ தம்பிய பார்க்கவும்.. டாக்டர்ன்னு சொல்லவும் பயந்துட்டாபோல", என்று சொல்ல
டக்கென எழுந்து உள்ளே வந்து விட்டாள் கோமதி.
(தொடரும்)