நவீன ரோமியோ ஜூலியட்காதல் காவியம்-3

என் வாழ்க்கை இப்பொழுது பட்டாம்புச்சி தன் சிறகு விரித்து பறப்பது போல பறக்கின்றது.நான் ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும் என் அப்பாவின் அலுவலகத்திற்கு சென்று விடுவேன்.என் ஜானுவும் தவறாமல் வந்து விடுவாள்.
நான் மாலை வீடு வந்ததும் சற்று நேரம் டிவி பார்த்துவிட்டு பின் படிக்க செல்வேன்.என் அப்பா படிப்பு விசயத்தில் கண்டிப்பாக இருப்பார்.அதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தேன்.
படிப்பில் எனக்கும் என் ஜானுவுக்கும் எப்பொழுதும் போட்டி.நான் முதல் மதிப்பெண் எடுத்தால் என் ஜானு என் பின் இரண்டாவதாக இருப்பாள்.இதிலும் ஒரு ஒற்றுமை எங்கள் இருவர் இடையே இருந்தது.
வாழ்வில் இன்பம் ஒரு பக்கம் இருந்தாலும் துன்பம் என்பது மறுபக்கம் வந்து கொண்டே இருக்கும்.
ஒரு நாள் என் அப்பா ,கையில் ஸ்வீட் டப்பா ஒன்றை என் அம்மாவிடம் கொடுத்து "promotion கிடைச்சிருக்கு,நாம சென்னை போக போறோம்"என்றார்.
நான் உடனே என் அப்பாவிடம் "அப்பா வேண்டாம்பா!எனக்கு இந்த school பிடுச்சிருக்கு.ப்ளீஸ் பா "என்றேன் . என் போராட்டம் அனைத்தும் என் ஜானுவுக்காகதான்!
என் காதல் தொடருமா?????????????????