மன்னிப்பாயா-வித்யா

காதல், நட்பு,உலகஉறவுகள்
யாவும் கடந்த ஓர் உறவென
அறிமுகமாகி.......

வாழ்க்கையின் வழிகளில்
என் வலி துடைக்க
உன் கரம் நீட்டினாய்.........

புரிதலின் பக்குவம்
குறைந்த ஒரு மந்தமான
மனநிலையில் உன்னை
வார்த்தைகளால் சுட்டவடு....
என்று மறையுமோ.....?
என்று மறக்குமோ.......?

உன் மனப்புத்தகத்தில்
எனக்கான பக்கங்களில்
கோபத்தை நிரப்புகின்றாயா.......?
கவலைகளை நிரப்புகின்றாயா...?

மனநிலைகளின் சூழ்நிலைக்கைதியாய்
என் வார்த்தைகள் வடிவெடுத்து
உருமாறி உன்னிதயம் துளைத்து
வருத்தியதை எண்ணி வருந்துகிறேன்........!

வழியெங்கும் தேடுகின்றேன்
எங்கு ஒளித்துவைத்திருக்கிறாய்
எனக்கான மன்னிப்பை......?

முடிவாக முடிவெடுத்து
முடித்துவிட துடிக்கின்றாயா
பிரிவு மடல்களில்
பொதிந்து கிடக்கும்
வரிகளின் வலிகளை
அறியவில்லையா நீ........?

காலம் தாழ்த்தி
மன்னித்துவிட்டேன்
என்று நிச்சயம் நீ கூறுவாய்........
அது கூட தண்டனைதான்
என்பதையும் நீ அறிவாயோ.......?

காலம் தாழ்த்தாத
உன் பதில்களுக்குள்
சிறைக்கதியாய் சிக்கிஇருக்கிறது
என் மனம்...........!

பிரிவுகளின் வழிகளில்
மனங்கள் மரணிக்குமாமே........
என் இரு துளி கண்ணீர்
என் மனதின் மரண சேதி
சொல்கின்றதோ என்னவோ......?

எழுதியவர் : வித்யா (19-Apr-14, 3:05 pm)
பார்வை : 251

மேலே