காதல் ரகசிய மணம் - வாசம் அறியா நாசிக்கு

தேவதை தேடி
தெருவோரம் நின்றேன்
வீட்டு வாசல்
வசை பாட
தெருவோர காதலெல்லாம்
தெருமுனையில் முடியாது

கைக்குட்டை கைமாறி
கனவை கலைக்க
எண்ணம் தடுமாறி
காதல் நினைத்தது

காதலி நீயே
காதலை மறுக்க - அதை
தடுக்க கூட
மனமில்லை

ஆதலால்,உன்
நினைவை கயிறாய்
எண்ணி என்னை
தூக்கிலிட்டேன்
மரித்த பின்

மரிக்கா உன்
நினைவு
கயிறுடன்
காதல் செய்கிறது
உயிருடன்

கரு விழியை
கட்டி வைத்து
கலகம் செய்யும்
கன்னியே ..!!

இதோ
இன்னும் அழியாமல்
சிற்பத்தின் சிணுங்கல்
ரசித்த கணங்கள்
ரகசிய மணமாய்
வாசம் அறியா
என் நாசியை
வந்து வந்து
வதம் செய்கிறது ..!!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (19-Apr-14, 3:58 pm)
பார்வை : 447

மேலே