நீயும் நான்தானே

இறந்தா போனேன் நான் -ஏனோ
மறந்தே போனாய் நீ
மரித்தா போனேன் நான்-என்னை
எரித்துப் போனாய் நீ

என்னை காட்டிலும்
என்னை உணர்ந்தவள் நீ-என்ற
எண்ணம் கலைத்தாய் -என்னில்
என்னை தொலைத்தாய் நீ

என்னை புரிந்தும் எல்லாம் தெரிந்தும்
முன்பே உரைத்தும் முழுதாய் அறிந்தும் ,
நீங்கி சென்றதும் நிஜமாய் மறந்ததும்
ஏங்கி சாவதே எனக்கென ஆனது

தேங்கி போன சேறாய் ஆனேன்
உள்ளும் புறமும் உணராதிருந்தேன்
நேற்றும் இன்றும் புரியாதிருந்தேன்
நினைவில் என்னை நீங்காதிருந்தேன்

காலம் இல்லையோ கண்ணே உனக்கு
கருத்தில் தொலைந்ததோ என் முகம் உனக்கு
கட்டளை பிறந்ததோ எனை நீ மறக்க
காரணம் நூறு உனக்கென இருக்க

நோவதா உன்னை நான் -இல்லை
நீயும் நான் தானே-இல்லை
போவதா நீங்கி நான் -என்
வாழ்வும் நீதானே

எழுதியவர் : ஸ்ரீதர் (19-Apr-14, 3:40 pm)
Tanglish : neeyum naanthaane
பார்வை : 109

மேலே