வாழ்க்கை புத்தகம்
உன் முகம் காணாது
விடியும் பொழுதுகள்
எனக்குள் சோதனைகளாய்...
உன் குரல் கேட்காமல்
மடியும் தினங்கள்
என்னுள் போராட்டங்களாய்...
வாழ்வெனும் புத்தகத்தின்
தொடக்கமதிலே என்னில்
சஞ்சரித்தவனே..,
புத்தகமாய் தொடர்ந்திடவே
நான், விரும்பிய வாழ்வை
சிறு வாக்கியமாய்
முடித்துச் சென்றவன் நீ!
காதலெனும் சொல்லையே
என்னில் சோகமென
அறிமுகம் செய்தவன் நீ!
தொடக்கத்தையே முடிவாய்
மாற்றியமைத்தாய்...
நீ முத்திரை பதித்துப் போன
முற்றுப் புள்ளிகளோடு - இன்று
எவரெவரோ வந்து
தொடர் புள்ளிகள் வைத்தாலும்,
தொடர்ந்திடவே தயங்குகிறேன்;
வாக்கியத்தை புத்தகமாக்கும்
முயற்சிதனை!!!