மாலை சூரியன்

காலையின் சூரியன்தன் வேலை முடித்துவிட்டுச்
சோலை அடர்ந்த இடத்தினில் - மாலை,நல்
வேளையில் மண்மீ திறங்குவான் ! வாட்டமிலை !
நாளை திரும்பவரு வான் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (21-Apr-14, 7:29 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 550

மேலே