மாற்றம் மட்டுமல்ல

நான்முகன் படைப்புகளில் அதிசயமே! அற்புதமே!
நான்எனை மறக்கும்படி சிரிப்பவளே! மாங்கனியே!

வானடைத்த வெளிச்சத்தை விழியில் கொண்டவளே
தேனடையின் சுவையைத் தேகத்தில் வைத்தவளே

பால்நிலவே பைங்கிளியே கடலின் முத்தே !
வேல்விழியே உலகத்தை நாணத்தால் அளப்பவளே

நாடுநலம் தான்செழிக்க வாக்களிக்க மறவாதே
தேடும்நலம் கிடைப்பதற்கு வாக்களிக்க மறவாதே

காதலிங்கு தேவையடி என்னிலல்ல நாட்டின்மேல் !
ஆதலால் என்சொல் அன்போடு கேட்டிடுவாய்

ஓர்தல் வேண்டுமடி ஒழுங்காக நடந்தேறும்
தேர்தல் மாற்றம் மட்டுமல்ல ஏற்றமுமே !

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (21-Apr-14, 7:44 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 199

மேலே