நாழிகை பொழுதும் நாட்களாகும்

​ஒருமித்த இரு இதயங்கள்
ஒன்றிடும் ஒரு ஓவியமிது !
உருவங்கள் இணைந்திடுமே
உள்ளங்கள் இணைந்திட்டால் !

இதயத்துடிப்பு வேகம்பெறும்
இளமைதுடிப்பு உருவம்பெறும் !
பருவம் மோகமழை பொழியும்
பகுதிநேர சுனாமியும் உருவாகும் !

எண்ணங்கள் வண்ணமயமாகும்
ஏக்கங்கள் எரிந்து சாம்பலாகும் !
வார்த்தைகள் செயல் இழக்கும்
மூச்சுக்காற்று முட்டி மோதிடும் !

விழிகள் தன்னிலை மறக்கும்
வழியின்றி மயங்கி நின்றிடும் !
சுற்றுப்புறம் வற்றிப் போகும்
சுயநினைவும் விலகி செல்லும் !

தன்னிலை திரும்ப தாமதமாகும்
நானிலமும் காணி நிலமாகும் !
நாணமும் தொற்றிக் கொள்ளும்
நாழிகை பொழுதும் நாட்களாகும் !

இருவரும் வாழ்வில் இணையட்டும்
இன்பமே இதயத்தில் நிலைக்கட்டும் !
வையகம் போற்றிட வாழ்ந்திடட்டும்
பைந்தமிழ் சுவையில் திளைக்கட்டும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (21-Apr-14, 8:55 pm)
பார்வை : 128

மேலே