மயிலிறகின் வருடல்
தாயின்
கருவறையில் இருந்து
நான்
பிறந்து விழுந்த பொது
தென்றல்
என்னை தொட்டு
தழுவிச்சென்ற சுவடுகள்
என் நினைவில் நில்லாமல்
எங்கோ
ஒளிந்து கொண்டது
அந்த
மயிலிறகின் வருடல்
என்னை தழுவும் போதெல்லாம்
என் மயிர் இழைகளில்
ஈரம் பூக்கும்!
இரத்தம் மிச்சமின்றி
தலை உச்சமேரும்
என் உடல்
மீண்டும்
கருவறை கடக்கும்
குழந்தையைப்போல்!!